தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்கள் மற்றும் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு; மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக இழந்த பணம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 316 எதிரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் உள்ள தொகை ரூ.13,77,15,099 ஆகும்.
அதில் பாதிக்கப்பட்ட 48 நபர்களுக்கு பணம் மொத்தம் ரூ.62,22,194 மீட்கப்பட்டு மற்றும் காணாமல் போன விலை உயர்ந்த 65 எண்ணிக்கையுள்ள ரூ.11,70,000 (பதினொரு இலட்சத்து எழுபதாயிரம்) மதிப்பு உள்ள செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.




மீட்கப்பட்டுள்ள செல்போன்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் 07.03.2024 அன்று உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மீதம் உள்ள தொகையை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 577 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ10,38,06,000 (பத்துகோடியே முப்பத்தெட்டு இலட்சத்து ஆறாயிரம்) ஆகும். மேலும் சைபர் கிரைம் மூலம் பணம் இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுக்கவும், அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் குற்றவாளிகளை கைது செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்-.அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









