தென்காசி மாவட்ட காவல் துறையின் வாகனங்கள் பொது ஏலம்..
தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் 02.03.2024 அன்று காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இருசக்கர வாகனங்களும் 01 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன.
வாகனங்களை 01.03.2024 முதல் 02.03.2024 காலை 09.00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம். இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இரு சக்கர வாகனத்திற்கு 1,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு 7305543727 & 9498192345 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









