பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ..
கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் S.சிவஆனந்த்,.மாவட்ட கழக இணை செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட கழகத் துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட கழக பொருளாளர் சண்முகையா உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமைக் கழக பேச்சாளர்கள் உட்பட பலர் உடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.