தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் பங்கேற்பு..
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. காந்தி நகரில் உள்ள, பக்கீர் மைதீன் என்பவரின் டீக்கடையிலும், இந்திரா நகரில் உள்ள, தமீம் அன்சாரி என்பவரின் செப்பல் கடையிலும், இரண்டு நாட்கள் கழித்து திருமலையப்பபுரத்தில் உள்ள இப்ராஹிம் என்பவரின் பேன்ஸி கடையிலும், தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் நவாஸ்கான் முன்னிலை வகித்தார், பொருளாளர் பாக்யராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். துணைச் செயலாளர் மணிகண்ட ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கடையம் காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன், சங்க உறுப்பினர்கள் பிச்சையா, காதர் மைதீன், முகைதீன் பிச்சை, காமராஜ், தங்கையா, தமீம் அன்சாரி, குமார், காலித், காதர்மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவல்துறையினரும், அப்பகுதி மக்களும், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கத்தின் இச்செயலை பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









