தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டம் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் 10.05.2024 அன்று வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிலை பொதுத்தேர்வினை 8,969 மாணவர்கள் மற்றும் 8,939 மாணவிகள் உள்ளிட்ட 17,908 பேர் எழுதினர். தேர்வெழுதியவர்களில் 8,066 மாணவர்கள் மற்றும் 8,533 மாணவிகள் என மொத்தம் 16,599 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.93 மற்றும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.46. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 92.69 ஆகும்.
தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 6,808 மாணவ மாணவியர்களில் 6,057 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.97 ஆகும். அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 4,734 மாணவ மாணவியர்களில் 4,416 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.28 ஆகும். பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய 3,144 மாணவ மாணவியர்களில் 2984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.91 ஆகும். மெட்ரிக் பள்ளிகளில் தேர்வெழுதிய 2799 மாணவ, மாணவியர்களில் 2,740 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.89 ஆகும். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் தேர்வெழுதிய 396 மாணவ, மாணவியர்களில் 379 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.71 ஆகும். சமூகநலத்துறை பள்ளிகளில் தேர்வெழுதிய 8 மாணவ மாணவியர்களில் 4 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 50 ஆகும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வெழுதிய 19 மாணவ, மாணவியர்களில் 19 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.