சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மண்டகப்படி ஜமீன்தாரால் நடத்தப்பட்டது. 2ஆம் நாள் மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3ஆம் நாள் மண்டகப்படி செட்டியார், பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4ஆம் நாள் மண்டகப்படி நாடார் சமுதாயமும், 5ஆம் நாள் மண்டகப்படி சேனைத்தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும், 6ஆம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினரும், 7ஆம் நாள் கோட்டைத்தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8ஆம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் முளைப்பாரி. தீச்சட்டி, ஆயிரம் கண்பானை. உருவம் மற்றும் மாவிளக்கு, பறவை காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் திருநாளை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். 10ஆம்நாள் திருவிழா 9ஆம்தேதி திருவிழா விஸ்வகர்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடைபெற உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









