தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைபள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-97, இயற்பியல்-99, வேதியியல்-97, கணிதம்-100, கணினி அறிவியல்-100. இப்பள்ளி மாணவி ஆர்.பேச்சியம்மாள் தேவி 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி யு. நித்யகல்யாணி 571 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.



மேலும் கணினி அறிவியலில் எம்.பத்ரி நாராணயன், எஸ்.அபிராமி, ஏ.சாருண்யா, கணிதத்தில் எம்.பத்ரி நாராயணன், எஸ்தருண், எம்.சூரியபிரகாஷ், இயற்பியலில் எம்.சூரிய பிரகாஷ், வணிகவியலில் எச்.முகமது அஃப்சல் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









