கடையநல்லூர் பகுதியில் வருவாய்த் துறையினர் அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..

கடையநல்லூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு, வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பாக வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அந்தந்த தாலுகா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக அதன் கிளைச் செயலாளரும், முதுநிலை ஆய்வாளருமான ராதா கிருஷ்ணன் தலைமையில், கிளை பொருளாளரும் பிர்கா வருவாய் ஆய்வாளருமான கருப்பசாமி ரஞ்சித்குமார் முன்னிலையில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காந்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் நாகராஜன், துணை வட்டாட்சியர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மாடசாமி விளக்கவுரை ஆற்றினர்.

வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணிவிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்க வேண்டும் பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈர்ப்புகளை உடனே வழங்க வேண்டும், உங்கள் ஊரில் உங்களைத் தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்ட பணிகளில் அதிக பணியின் நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்ட பணிகளை மேற்கொள்ள புதிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சாமி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!