தென்காசி மாவட்டம் சுரண்டை பீடி தொழிலாளர் நல மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார் தலைமை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்கேடி ஜெயபால், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ்டி சேர்மச்செல்வன், கவுன்சிலர் உஷா பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறைவிட மருத்துவர் அஞ்சலி வரவேற்று தொழிலாளர் தினம் மற்றும் தூய்மை இயக்க இருவார விழா குறித்து பேசினார்.



சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் சிறப்புரையாற்றி நகராட்சி தொழிலாளிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மே தினம் மற்றும் தூய்மை இயக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் எஸ்ஆர். பால்துரை, இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார், கவுன்சிலர்கள் அருணகிரி சந்திரன், ராஜ்குமார், வெயிலுமுத்து, சமூக ஆர்வலர் பிரபு, ராஜன், தூய்மை பணிக்கான மேற்பார்வையாளர் சங்கீதா ஆகியோருடன் செவிலியர் பாத்திமா, உதவியாளர் செல்லப்பா மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.