தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக் கிழமை பழைய குற்றாலம் சாலையில் உள்ள கே ஆர் டைகர் ரிசாட்சில் நடைபெற்றது. இதில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வசந்தம் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட தலைவராகவும், மேலகரம் பொறியாளர் கீதம் கன்ஸ்ட்ரக்ஷன் சங்கரநாராயணன் மாவட்ட செயலாளராகவும், ஆலங்குளம் சஞ்சய் பில்டர்ஸ் சிவகுருநாதன் பொருளாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களுடன் உடனடி தலைவராக முத்துக்குமார், துணைத் தலைவர்களாக சண்முக செல்வன், மாரியப்பன், இணைச் செயலாளராக இணைப் பொருளாளர் பாலகப்பிரமணியன், அப்துல்காதர் ரிபாய் செய்தி மற்றும் மக்கள் தொடர்பாளராகவும், இணை அமைப்பாளராக சங்கா ஆகியோரும் பொறுப்பேற்றனர்.

கே.ஆர். பில்டர்ஸ் ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கோவில்பட்டி ராகவன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். சண்முக செல்வன் பொறியாளர் உறுதிமொழி ஏற்றார். உடனடி முன்னாள் தலைவர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மண்டல தலைவர் மாரிமுத்து, முன்னாள் தலைவர்கள் தில்லை நடராஜன், காதர் பாஷா, முத்து மாரியப்பன் ஆகியோருடன் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஏற்புரை வழங்கினார். மாநிலத் தலைவர் நெல்லை ராஜேஷ் தமிழரசன், மாநில துணைத்தலைவர் சேலம் விஜயா பானு, மாநில செயலாளர் ராஜபாளையம் ஆர் எஸ் காந்தி மாநில துணைப் பொருளாளர் சார்ஜ் ஜோசப், சிவகாசி மண்டல தலைவர் நாகராஜன், திருநெல்வேலி மண்டல செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2024 2026 ஆம் ஆண்டிற்கான புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!