தென்காசியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கோடை கால பயிற்சி முகாமானது தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 29.04.2024 இன்று முதல் 13.05.2024 வரை 15 நாட்கள் தடகளம், கால்பந்து, கையுந்துப்பந்து, கபடி மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இக்கோடை கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் (ம) பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இக்கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ரூ.170 உடன் 18% என ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04633 212580 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!