தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..
தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், புளியரை சோதனைச் சாவடியில் கால்நடை பாரமரிப்புத் துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் பணிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.