முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..

தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சு.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு. அது தொடர்பாக ஆசிரியர்கள் நலன் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

அதில் மாவட்ட தலைவராக குத்துக்கல்வலசை செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கருப்பசாமி, மாவட்ட செயலாளராக குலையநேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கிருபா சம்பத், மாவட்ட பொருளாளராக மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வீர செல்வன் மற்றும் கௌரவ தலைவராக வே.நல்லையா, கௌரவ ஆலோசகராக சு.குமார் மாவட்ட துணைத் தலைவர்களாக ச.திருமலைக் குமார், மாரித்துரை மாவட்ட இணை செயலாளர்களாக செ.கிருபாகரன், சு.ரத்தினக்குமார் மாவட்ட அமைப்பு செயலாளராக சு.சங்கர நாாயணன், மாவட்ட மகளிர் அணி செயலாளராக ஷீலா, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளராக கு.முருகேஸ்வரி மாவட்ட செய்தி தொடர்பாளராக இலியாஸ், மாவட்ட சட்ட செயலாளராக க.பொன் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக சிவராஜ், ஜெயபாலன், வை.துரைசாமி, சி.பசுபதி தனராஜ், க.சுந்தரேசன், ச. ராஜா. பழனிச்சாமி, அருண் ஆகியோர் ஏகமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!