தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் பெருவிழா. என் வாக்கு என் உரிமை. என் வாக்கு விற்பனைக்கு அல்ல. 100 சதவீதம் வாக்களியுங்கள்.

நேர்மையாக வாக்களியுங்கள். வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், மாரீஸ்வரன், கீழப்பாவூர் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் ஜேசுமரியாள், வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை, பிரியா, குமுதவள்ளி, சாந்திமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









