தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி; தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வாழ்த்து..
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஒன்தாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் ஷைனி தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்றார். அசிசி பள்ளியில் பயிலும் மாணவி ஆக்னஸ் ஷைனியை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் யுனிவர் சிட்டியில் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை தேசிய ஊசூ போட்டி நடந்தது. இதில் பாவூர்சத்திரம் அசிசி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுரண்டை மாணவி எஸ்.ஆக்னஸ் ஷைனி ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார். இந்நிலையில், ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி எஸ்.ஆக்னஸ் ஷைனி, பழனி நாடார் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஊசூ பயிற்சியாளர்கள் சத்திய பீமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.