தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி..

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகளின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 05.04.2024 அன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

மேலும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து உழவர் சந்தை வரை விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியில், என் வாக்கு என் உரிமை, வாக்களிப்பது நம் கடமை, 100 சதவீதம் வாக்குப் பதிவு போன்ற வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை விவசாயிகள், அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஏந்தி வந்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கோ. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) சங்கர், தென்காசி, வேளாண்மை துணை இயக்குநர் (பொ) உதயகுமார், தென்காசி, வேளாண்மை உதவி இயக்குநர் ஜோதிபாசு, தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்களைச் சார்ந்த முன்னோடி விவசாயிகள் ஜாகீர் உசேன், பெரியசாமி, இஸ்மாயில், கோமதி தேவர் மற்றும் பெருந்திரளான விவசாயப் பெருமக்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!