தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு..
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில், வருகின்ற ஏப்ரல் 19.04.2024 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் தொடர்பாக விளம்பரங்களை தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி, எப்.எம். அலை வரிசைகள், பொது இடங்களில் ஒளிஒலி திரைகள் அமைத்தல், குறுஞ்செய்திகள், செய்தித்தாள்கள், மின்னணு செய்தித்தாள்கள், சமூக ஊடகக் கணக்குகள் ஒலிப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் வெளியிடும் முன் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1957 பிரிவு 127 A-இன்படி தேர்தல் தொடர்பாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரச்சாரம் செய்யும் போது அதன் முன்பக்கத்தில் அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர் (Publisher) மற்றும் முகவதி மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றினை படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.