தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குற்றாலத்திலுள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தேர்தல் தொடர்பான துண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. ஜனநாயகம் கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை,100% ஓட்டு இந்தியர்களின் பெருமை, நமது இலக்கு100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அவர்களிடையே விளக்கிக் கூறப்பட்டன.
சாந்தோம் முதியோர் இல்லம் மற்றும் மிசன் இந்தியா முதியோர் இல்லம் போன்ற முதியோர் இல்லங்களிலும் முதியோர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. முகாமிற்கான ஏற்பாடுகளை முதியோர் இல்லம் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் M.கலைச்செல்வி, P. டேவிட் ஜெயசிங், சமுக நலத்துறை சார்ந்த கேப்ரியல் பொன் ஆசிர், பானுப்பிரியா மற்றும் ரோஜா வனம் முதியோர் இல்லம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









