தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்..

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்..

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக சங்கரன்கோவில் அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அதில் திமுக வேட்பாளர்கள் பட்டியலில், தென்காசி தொகுதி வேட்பாளராக சங்கரன் கோவிலை சேர்ந்த அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். 40 வயதான இவர் கடந்த 2002 முதல் திமுக உறுப்பினராகவும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவு மருத்துவராகவும் உள்ளார். இவரது தந்தை சிவக்குமார் திமுக ஒன்றிய பிரதிநிதியாகவும், இவரது கணவர் கோ. ஸ்ரீகுமார் திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ள நிலையில், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது பெரியப்பா பே. துரைராஜ் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!