தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக் கிணங்க தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி 15.03.2024 முதல் 24.03.2024 வரை தினந்தோறும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூகநலத்துறை, காவல்துறை, சித்த மருத்துவம், இ-சேவை மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் மூலம் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!