செங்கோட்டை நகராட்சி பகுதியில் 1.59 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட்ட பூங்கா; தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்..
செங்கோட்டை நகராட்சியில் 1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்துசாமி பூங்காவினை மார்ச்.08 அன்று காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கோட்டை நகராட்சி 1921 ஆம் ஆண்டு நிறுவனம் செய்யப்பட்ட நகராட்சியாகும். இந்நகராட்சி கேரள அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ்நாடுடன் 1956 இல் இணைக்கப்பட்டு நகராட்சியாக தொடர்ந்து இருந்து வருகின்றது. செங்கோட்டை நகராட்சியின் ஆட்சி எல்லையானது செங்கோட்டை கிராமம் ஆகும். இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 268.09 ஹெக்டேர் (268 சதுர கிலோ மீட்டர்) ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை 26823 ஆகும். இந்நகராட்சியானது இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது.



ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய பூங்காவாக செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்கா திகழ்ந்தது. தென்காசி மாவட்டத்தின் அதிக பரப்பளவு கொண்ட முத்துசாமி பூங்காவின் மொத்த பரப்பளவு 4.5 ஏக்கர் ஆகும். முத்துசாமி பூங்காவினுள் புணரமைப்பு பணிகள் மேற்கொண்டிட ரூ.159.40 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148.01 லட்சம் முழு மானியத்திலும், அம்ரூத் 20 திட்டத்தின் மூலமாக ரூ.11.39 லட்சம் முழு மானியத்திலும் பூங்கா புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









