தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.




மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு. முருகானந்தம், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர்.இரா.இளவரசி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வைத்து 30.01.2024 இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களை முன்னிட்டு இக்கூட்டம் 31.01.2024 புதன் கிழமையன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை 31.01.2024 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் அளித்து அதற்கான தீர்வினை அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









