தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம்-2013 பற்றிய விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் -2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளக புகார் குழு அமைத்தல், புகார் பெட்டி வைத்தல் மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும், அனைத்து பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பலகை வைப்பது குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா விளக்கவுரை ஆற்றினார்.

மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு Selfie with Daughter போட்டியானது மாவட்ட ஆட்சித்தலைவரால் துவக்கி வைக்கப்பட்டது. 04.03.2024 முதல் 07.03.2024க்குள் மகள்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ https://forms.gle/ARrqerSxvtS7b3KSA என்ற இணைப்பில் தங்களுடைய முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு 08.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பரிசுகள் வழங்குவார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!