தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தலைமையில் செங்கோட்டையில் நடந்தது. வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குக்கான பணிகள் அதிமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறைகள் அமைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா தலைமையில் செங்கோட்டையில் நடைபெற்றது.

இதில், அதிமுக மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவ ஆனந்த், மாவட்ட கழக அவைத் தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சண்முகப் பிரியா, மாவட்ட கழக துணைச் செயலாளர் சகுந்தலா தனபால், மாவட்ட பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ குட்டியப்பா தேர்தல் பணிகள் குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.