பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி வடகரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வரும் வடகரை பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வடகரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து முகம்மது MC, கண்டன உரை ஆற்றினார். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. விவசாய அணி மாவட்ட செயலாளர் முகம்மது காசிம், தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம், நகர செயலாளர் முகம்மது யாஸீன், நகர துணை தலைவர் அப்துல் பாசித், நகர பொருளாளர் அப்துல் ரகுமான், நகர ஊடக பொறுப்பாளர் அகமது பைசல், காஜா ஷெரீப் நகர செயற்குழு வாவா நகரம் அன்சாரி, ரகுமானியாபுரம் இஸ்மாயில், திவான், அபூபக்கர், இஸ்மாயில், கலீல், இஸ்மாயில் SDTU, மர்கபா, சாகுல், அம்பியா மற்றும் பொது மக்கள் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.