தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தினை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் துவக்க விழா இன்று (30.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலைக் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, புதுமைப் பெண் திட்டமானது அரசு பள்ளி மாணவிகளைப் போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்ற ஏழை எளிய மாணவிகளை சாதனை யாளர்களாக உருவாக்கிடவும், உயர் கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், தமிழக அரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித் தொகை வழங்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை தூத்துக்குடியில் துவக்கி வைத்துள்ளார். அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 42-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 2716 கல்லூரி மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், 10 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலைக் குமார் ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், இணை இயக்குநர் (திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம்) முனைவர் அ.இரவீந்திரன், செயலர்/இணை ஆணையர், (இந்து சமய அறநிலையத் துறை, தூத்துக்குடி மண்டலம்) ம.அன்புமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.கணேசன், ஆலங்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். ஈ.ஷீலா, பராசக்தி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தமிழ்ச் செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப் பாண்டியன், மாவட்ட சமூகநல அலுவலர் பே.மதிவதனா, கண்காணிப்பாளர் காட்வின் வேத ஞானராஜ் (சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை) மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









