தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்..

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.12.2024 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான நலத் திட்டங்களை (06.12.2024) அன்று துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.53,520 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும், 02 பயனாளிகளுக்கு ரூ.14,560 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளும், 300 பயனாளிகளுக்கு 4.05 கோடி மதிப்பிலான பட்டாக்களுக்கான ஆணையினையும், 15 பழங்குடியின மக்களுக்கு இலவச வீடுகளுக்கான சாவியும், தாட்கோ மூலம் 03 பயனாளிகளுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு ரூ.15,76,000 மதிப்பிலான கடன் உதவிகளும், 06 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய உதவித் தொகையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4,50,000 மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ரசீதுகளும், மாவட்ட தொழில் மையம் மூலம் 19 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு ரூ.133.45 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு வேளாண் வளர்ச்சித் திட்டம் நிரந்தரப் பந்தல் அமைக்கும் பணிக்காக ரூ.2,37,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், வேளாண் துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.12,500 மதிப்பிலான மின்கலத் தெளிப்பான்களும், வேளாண் பொறியியல் துறை மூலம் 08 பயனாளிகளுக்கு ரூ.64 இலட்சம் மதிப்பில் இலவச ஆழ்துணைக் கிணறு அமைத்து மின் மோட்டார் அமைப்பதற்கான நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான திருமண உதவித் தொகையும், மாநில ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2415 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,01,22,000 மதிப்பிலான கடன் உதவித் தொகையும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பழத் தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனத்தை ஊக்குவித்தல் திட்டத்தின் மூலம் 54 பயனாளிகளுக்கு ரூ.1,23,000 மதிப்பிலான கடன் உதவிகளும், 01 பயனாளிக்கு நாட்டுக் கோழி பண்ணை அலகு மானியம் ரூ.1,56,875 மதிப்பிலான கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஆதரவற்ற விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு 50 சதவீதம் மானியத்தில் ஆதரவற்ற குஞ்சுகள் விநியோகத் திட்டத்தின் கீழ் 356 பயனாளிகளுக்கு ரூ.6,69,600 மதிப்பிலான கடன் உதவிகளும், 17 பயனாளிகளுக்கு பாசனப் பகுதிகளில் பசுந்தீவனம் உற்பத்திக்கு ரூ49,500 மதிப்பிலான கடன் உதவிகளும், மானாவாரி தீவன உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு 5,69,00 மதிப்பிலான கடன் உதவிகளும், இயந்திர புல்வெளி வெட்டிகள் விநியோகத்தின் கீழ் 09 பயனாளிகளுக்கு ரூ.1,44,000 மதிப்பிலான கடன் உதவிகளும் என மொத்தம் 3280 பயனாளிகளுக்கு ரூ.15.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தென்காசி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்ததாவது, நாங்கள் தென்காசி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். இவ்விழாவில் எங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணிபுரியும் போது பாதுகாப்பாக பணிபுரிவதற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதனால் நாங்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பாக பணிபுரிய முடியும். இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சமபந்தி விருந்தில் எங்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள். அவர்கள் எங்களுடன் உணவருந்தியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

சங்குபட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சங்குபட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் மகளிர் சுய உதவிக்குழு நிதியாக ரூ.70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தோம். இத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு கடன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் சுயமாக தொழில் தொடங்கி உள்ளோம். இதனால் எங்கள் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு கடனுதவித் தொகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மிக்க நன்றி. 

இந்திரா காந்தி மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவித்து உள்ளதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்திரா காந்தி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.20 இலட்சம் ரூபாய் கடன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தோம். எங்கள் குழுவிற்கு கடன் உதவித் தொகை கிடைத்துள்ளதால் நாங்கள் சொந்தமாக தொழில் தொடங்கி எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இதனால் எங்கள் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு கடனுதவித் தொகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்டம்.

 

செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!