தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சம்சுதீன் கிராத் ஓதினார். மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர பொருளாளர் முகம்மது யூசுப், மாநில வர்த்தக அணி தலைவர் செய்யது சுலைமான், மாநில விவசாய அணி செயலாளர் முகம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் சாகுல்ஹமீது, முகம்மது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அகமது மீரான், முகம்மது சலீம், முகமது இஸ்மாயில், அப்துல் ரகுமான், செய்யது மசூது, சாகுல்ஹமீது, முகம்மது காசிம், முகம்மது ஜமால், முகமது யாசின், அப்துல் ரகுமான், குலாம் முகம்மது தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர், முஸ்லிம் லீக் மாணவரணி தேசிய துணைத் தலைவர் முகம்மது அல் அமீன், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான் ஆகியோர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மாவட்ட தமிழ்நாடு அரசு காஜி முகைதீன் ஹஜ்ரத், கோவில் அர்ச்சகர் கணபதி ராமன், புனித மிக்கேல் அதி தூதர் ஆலய பங்கு தந்தை போஸ்கோ குணசீலன் ஆகியோர் சமய நல்லிணக்க உரையாற்றினர். தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். அப்துல் அஜீஸ், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஹாஜா ஹரிபுன் நவாஸ், அல்லா பிச்சை, முகமது ஜமால், ஹாருன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் வெங்கடேஸ்வரன், நகர செயலாளர் கார்த்திக், விசிக மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், மண்டல துணைச் செயலாளர் சித்திக், தமுமுக மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், இந்திய கம்யூனிஸ்ட் அயூப்கான், தமுமுக நகரத் தலைவர் அபாபில் மைதீன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகம்மது காமில், திமுக நிர்வாகிகள் ஷேக்பரித், தங்கபாண்டியன், சன்ராஜா, மைதீன், சுப்பிரமணியன், முத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முஸ்லிம் லீக் நகர செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.