தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், நாகூர் மீரான், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, கணேசன், ஈஸ்வரன், மற்றும் சமூக சேவை அமைப்பை சார்ந்த சரவணக்குமார், ஜான் வெஸ்லி, குமார், நகர திமுக பொருளாளர் சேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், இளைஞர் அணி முரளி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துக்குமார், சுடலை, துரைசாமி, முத்துமாரியப்பன், சுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள், டிபிசி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.