தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் செயல்பாடு குறித்து பல சிறப்பு அறிவுரைகள் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், ஆணையர் (இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, மருத்துவர்கள் சதீஷ் குமார் மாரியப்பன், பாக்யஸ்ரீ, கிறிஸ்டி, மருந்தாளுநர்கள் நாகராஜன், உஷா, பயிற்சி மருத்துவர்கள் அனுபிரியா, லோகமுத்ரா, மருத்துவமனை பணியாளர் கார்த்திக், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.