மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளை சுற்றுலா அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..

மாற்றுத்திறன் படைத்த சிறப்பு பள்ளி குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை திருநெல்வேலி அறிவியல் மையத்திற்கு சுற்றுலாவிற்கு அனுப்பி தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் குழந்தைகளை மகிழ்வித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவியல் மையத்திற்கு 04.03.2024 அன்று ஒருநாள் சுற்றுலாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனுப்பி வைத்தார்.

மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 714 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) நடராஜன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளின் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!