குற்றாலம் அருவியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வினை தொடர்ந்து பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்தது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குற்றாலத்தில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ள பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து குற்றாலத்தில் குளிக்க அனுமதி கோரி கோரிக்கைகள் வரப்பெற்றதை தொடர்ந்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்தும், பொதுமக்கள் குற்றால அருவியில் ஓரமாக நின்று குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஒரு வார காலத்திற்கு பிறகு குற்றால அருவியினை சீரமைத்து மீண்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கியது பொது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.