தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய ரயில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரை புதுடில்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், திருநெல்வேலி தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்தல், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்து அதனை ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.
மேலும், கீழப்புலியூரில் இருந்து கடையநல்லூருக்கு பைபாஸ் லைன் அமைத்தல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயிலையும், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலையும் நிரந்தர ரயிலாக இயக்குதல், திருநெல்வேலி – கொல்லம் மீட்டர் கேஜ் ரயில்களை மீண்டும் இயக்குதல், ஏற்கனவே மூன்று முறை அறிவிக்கப்பட்டு இயக்கப்படாமல் இருந்த தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். செகந்திரபாத் – கொல்லம் ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தியுள்ளார். தென்காசி எம்.பி வலியுறுத்திய கோரிக்கைகள் அனைத்தையும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்று எம்பிக்கு நன்றி தெரிவித்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.