குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று வயது ஆண் யானை அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக குற்றாலம் அனைத்து அருவிகளிலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியிலிருந்து 300 மீட்டர் தூரத்தில், மூன்று வயது ஆண் யானை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உடல் சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.