சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 05.12.2024 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் / பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முனைவர் சீ.சுரேஷ்குமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், சொர்ணராஜ், நாகூர் A.H. நஸிமுதீன், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ஜே.முகமது ரபீ, எஸ்.வசந்த் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினருக்காக அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற சிறப்பு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அவை முறையாக சிறுபான்மையின மக்களை சென்று அடைகிறதா என்றும், அனைத்துத் தரப்பு சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய தென்காசி மாவட்டத்திற்கு இக்குழு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சிறுபான்மையினர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், மேலும் இப்பணிகளை விரைவுப்படுத்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அக்கூட்டத்தின் வாயிலாகவே தகுதியுடைய கோரிக்கைகளுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் சிறுபான்மையின அமைப்பை சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கிறித்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டம் அமைத்தல் மற்றும் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை ஏற்படுத்தி அதில் பேவர் பிளாக் அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வழங்கிய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக விசாரணை செய்து அறிக்கைகளை இந்த ஆணையம் பெற்று, தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது. தகுதியுடைய கோரிக்கைகள் அனைத்தும் அன்றைய தினமே தீர்வு காணப்பட்டு வருகிறது. நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நலத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்தோர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மூலம் 03 ஏழை எளிய கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 மதிப்பிலான கல்வி உதவித் தொகையினையும், 07 பயனாளிகளுக்கு தலா 10,000 வீதம் ரூ.70,000 மதிப்பிலான தொழில் உதவித் தொகையினையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.8,300 வீதம் ரூ.83,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 50 பயனாளிகளுக்கு ரூ.69,63,000 மதிப்பில் டாம்கோ கடன்களையும், 09 பயனாளிகளுக்கு உபதேசியார் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் என மொத்தம் 82 பயனாளிகளுக்கு 71,46,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோஅருண் சே.ச வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அயூப் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!