பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விவசாயி கண்ணையா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


அந்த புகார் மனுவில் தன்னுடைய மனைவியான கோமதி அம்மாள் பெயரை பட்டாவில் சேர்ப்பதற்காக மனுநீதி நாள் முகாமில் மனு அளித்ததாகவும், அந்த மனு மீதான விசாரணையானது தற்போது தென்காசி வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ள நிலையில், தங்களது நிலத்திற்கு உரிய பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் கேட்டதாக கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயி கண்ணையா புகார் மனு ஒன்றை அளித்தார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லை என்றால் வரக்கூடிய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் அன்று லஞ்சம் பற்றிய தகவல்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்படும் எனவும் விவசாயி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.