பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான் ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி செய்து எல்லை கல் ஊன்றி கடமையை செய்திருக்கிறார்கள். இதற்கான விரிவான வரைபடம் வட்டாட்சியாளர் வடகரை செயல் அலுவலருக்கு வழங்கி இருக்கிறார். இந்நிலையில், பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்பியதுடன், இதனை உள்ளாட்சி துறை அல்லாத பிறதுறை அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் காந்தியவாதியுமான வாவாமைதீன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.