தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது.
இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் விரைவாக அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.