தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே செயல்பட்டு வந்த எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மேக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பல தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல நீர் வீழ்ச்சிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
இருப்பினும் ஒன்றிரண்டு நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளிடம் ரூ100, 200, 300 என கட்டணம் வசூலித்து குளிக்க அனுமதித்தனர். அங்கு வரும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு போதையில் அடி,தடி மற்றும் சாதிய மோதல்கள் என அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் எருமைச்சாடி தனியார் நீர் வீழ்ச்சி முள்கம்பி வேலி அமைத்து மூடி குளிப்பது தடை செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.