தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, கையில் குடை பிடித்த நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் (SH-39) நெடுஞ்சாலையில் தேவை இல்லாத இடத்தில் சாலையை கடந்து செல்ல திறந்தவெளி அமைத்தும், தேவைப்படும் இடங்களில் அமைக்காமல் இருப்பது பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பின்றி உள்ளதாகவும் கூறி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கிழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், லாடசன்னியாசி (எ) சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், அருவேல் ராஜ், நகரச் செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் கழகச் செயலாளர்கள் முத்துராஜ், காத்தவராயன் (பொறுப்பு) கார்த்திக், குமார், ஜெயராமன், சுப்பிரமணியன், வில்சன், பசுவதி, மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமையா, மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.