செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. இதில் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மத்திய விளையாட்டுத் துறை, நேரு யுவகேந்திரா மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை, செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து நூலகத்தில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு செங்கோட்டை வருவாய் துறை தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பிரிவு அலுவலர் சிவன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவ்விழாவிற்கு வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செண்பக குற்றாலம், SMSS பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நூலக வாசகர்கள் ,போட்டித் தேர்வு மாணவர்கள் அனைவரும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சதீஷ் (என்ற) சண்முகையா செய்திருந்தார். முடிவில் நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.