தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, 23.11.2024 அன்று காலை 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள்களாக, 1. கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், 2. கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், 3. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 4. தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், 5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 6. ஐல்ஜீவன் இயக்கம், 7. தீன் தயாள் உபாத்தியா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், 8. கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, 9. கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இக்கிராம சபை கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.