காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாய நிலங்களுக்கு மின் வேலி; தென்காசி மாவட்ட கவுன்சிலர் அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து வருவதை தடுக்க விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கோரிக்கை மனு அளித்துள்ளார். அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம், திரிகூடபுரம் ஊராட்சி, மற்றும் சொக்கம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. மேற்படி மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருவதோடு மட்டும் அல்லாமல் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் காட்டு யானைகள் வந்து செல்வதால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேற்படி காட்டு யானை தாக்கி சொக்கம்பட்டியை சார்ந்த விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். வனத்துறை அதிகாரிகள் மேற்படி காட்டு யானையை காட்டிற்குள் விரட்டி விட்டாலும் மீண்டும் மக்கள் வாழும் பகுதிக்கு வந்து பலவிதமான இடையூறுகளை செய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகையால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழும் மக்களின் பாதுகாப்பையும், நலனையும், கருத்தில் கொண்டு காட்டு யானைகள் விவசாய நிலத்தில் நுழையா வண்ணம் மின்வேலி அமைத்து தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!