இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்கக்கூடாது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் எரிபொருள் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வங்கிகள், மளிகைச் சாமான் கடைகள், காய்கறி கடைகள், திரையரங்கங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவிதமான பொருட்களை விற்கும் கடைகள், பலவித சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலும் இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்கக்கூடாது.
இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்கள், தென்காசி மாவட்டத்திற்குள் நடக்கும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் செல்லுபடியாகும். நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணய பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தென்காசி மாவட்டத்திற்குள் செயல்படும் அனைத்து வங்கிகளும் 10 ரூபாய் நாணயத்தை நுகர்வோர் மற்றும் அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கி பணப்பரிவர்த்தனை செய்ய எக்காரணம் கொண்டும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.