குருக்கள்பட்டி அருகே நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆயாள்பட்டி டிடிடிஏ துவக்க பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தலைமை வகித்தார். தென்காசி எம்பி ஸ்ரீ ராணி குமார் முகாமை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கோதையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேர்ந்தமரம் நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள், கலந்து கொண்டு அனைத்து நோய்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் வழங்கினர். 

மேலும் நீர், இரத்த பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ் ரே, இயன்முறை மருத்துவம், தொற்றா நோய்களை கண்டறிதல், கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், காசநோய் பரிசோதனை, இதயநோய் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் செய்து, சிகிச்சைகள் வழங்கினர். இதில் சேர்ந்தமரம் நிலைய மருத்துவமனை மேற்பார்வையாளர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பையா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வகிருஷ்னண், பாலசுந்தரம், ஜெயராம், சுகுமார், விக்னேஷ், சுரேஷ், கிராம செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் குடிநீர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் சார்பாக இலவசமாக சத்து உணவு பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்பையா நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!