செங்கோட்டை நகர பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சமூக நல ஆர்வலர்கள், கல்வி நிறுவனத்தினர் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தேவையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.



அந்த வகையில், செங்கோட்டை பார்டர் ரஹ்மத் புரோட்ட ஸ்டால் மற்றும் வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளி இணைந்து செங்கோட்டை நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஒரு லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். நிகழ்வில் தென்காசி ஒன்றிய சேர்மன் ஷேக் அப்துல்லா மற்றும் பார்டர் ரஹ்மத் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் முகமது அசன், நேஷனல் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அப்துல் மஜீத், ராயல் பள்ளியின் தாளாளர் ஹக்கீம், ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை தலைவர் அபு அண்ணாவி மற்றும் செயலாளர் தேன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.