தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், சென்னையில் நடைபெற்ற அரசு ஊழியர் பிரிவிற்கான இறகுப்பந்து (ஒற்றையர் பிரிவு) விளையாட்டு போட்டியில் ரமேஷ் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் ரூபாய் 50,000 ரொக்கப்பரிசும் பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் சங்கரன்கோவில் விண்மீன் இல்ல மாணவி செல்வி.திவ்யா குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று ரூபாய் 75,000 ரொக்க பரிசும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ந.ஆ.ஜெய இரத்தின ராஜன் உடன் இருந்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.