தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நெல்லையைச் சேர்ந்த செல்வி. சூடாமணி எழுதிய எம்மண்ணின் நட்சத்திரங்கள் என்ற கட்டுரை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் மற்றும் இணைச் செயலாளர் செண்பகக் குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் செல்வி. சூடாமணி சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் எழுத்தாளர் ஐயப்பன், எழுத்தாளர் தளவை. இளங்குமரன், பாப்பாக்குடி முருகன் மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 50 மாணவர்கள் திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டார்கள். முடிவில் நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

முன்னதாக செங்கோட்டை நூலகத்தில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல் நூலாக முனைவர் வீரை மைதீன் எழுதிய “இளம்பிறையின் இளங்கீற்றுகள்” என்ற கவிதை நூலை நல்லாசிரியர் மாடசாமி வெளியிட மருத்துவர் ஆபிலா பெற்றுக் கொண்டார். இரண்டாவது நூலாக முனைவர் வீரை மைதீன் எழுதிய “உயிரில் உறைந்த மொழியே” என்ற கவிதை நூலை துபாய் எழுத்தாளர் மதுஷானிகா வெளியிட வழக்கறிஞர் மதார் முகைதீன் பெற்றுக் கொண்டார். மூன்றாவது நூலாக துபாய் எழுத்தாளர் மதுஷானிகா எழுதிய “கூடு தேடும் பறவை “என்ற கவிதை நூலை எக்கோ ரேடியோ நிறுவனர் வெங்கட்ராமன் வெளியிட கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் நிறுவனர் ரித்துசூர்யா பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பாப்பாக்குடி முருகன், ஹாஜி ஷேக் மீரான், அலிபாத்திமா, செங்கை ஷெரிப், முகமது ஆதில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர் வீரை மைதீன், மதுஷானிகா ஏற்புரை வழங்கினார்கள். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.