தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கிவைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (25.10.2024) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்ததாவது, ஆசிரியர்கள் புத்தாக்க சிந்தனையோடு செயல்பட்டு பல புத்தாக்க கண்டுபிடிப்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார். புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ரஞ்சனி, அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் புதிய பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) பலவேசம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.