தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திமுக ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, கிளைச் செயலாளர் நவாஸ் கான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன், தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர், முதலியார்பட்டி பள்ளிவாசல் பொருளாளர் அசன் மைதீன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாசுல் அஷ்ரப், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் வாழ்த்துரை வழங்கினார்.



தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக சிறுபான்மை அணி ஒன்றிய செயலாளர் செய்யது அலி, சந்திரசேகர், ரஹ்மான், மாவட்ட சிறுபான்மை அணி ஷேக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் அழகு, மற்றும் ஷேக் முகமது, மைங்கண்ணு, மாலிக், ஷேகப்பா துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.